web analytics
Tuesday, December 6SOCIAL MEDIA

விஜயகாந்த் சினிமாவில் நடிக்கிறாரா? – பிரேமலதா விளக்கம்

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஜயகாந்த். தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும், நற்பனி மன்றங்களையும் உருவாக்கியவர். 80,90 களில் பல ஹிட் படங்களை கொடுத்தவர்.

தேமுதிக எனும் கட்சியை துவங்கி நடத்தி வந்தார். தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ, எதிர்கட்சி தலைவர் என்கிற அந்தஸ்தையும் பெற்றார். ஆனால், தனது செயல்பாடுகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜய்மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தில் விஜயகாந்த் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியானது. இது விஜயகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த தகவலை அவரின் மனைவி பிரேமலதா மறுத்துள்ளார். அது தவறான செய்தி. விஜயகாந்த் தற்போது கட்சி பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை செய்து கொண்டு ஓய்வில் இருக்கிறார். அவர் நடிப்பதாக இருந்தால் கட்சியின் தலைமைக்குழு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

%d bloggers like this: