தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமணி. கார்த்திக்கு ஜோடியாக அவர் நடித்த பருத்திவீரன் படத்திற்கு தேசிய விருதும் பெற்றார். அதன்பின் 13 வருடங்களுக்கு முன்பு முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் படு கிளாமராக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்த புகைப்படம் நெட்டிசன்களை வாயை பிளக்க வைத்துள்ளது. அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர் ஒருவரு ‘என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?’ எனக்கேட்டார். இதற்கு பதில் கூறிய பிரியாமணி ‘எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் கணவரிடம் கேளுங்கள். அவர் சம்மதித்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்’ என கூலாக பதிலளித்தார்.