சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் கிராம செண்டிமெண்ட் கதைகளை இயக்கி வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை என பாண்டிராஜ் விளக்கமளித்தார்.
இந்நிலையில், தெலுங்கில் தற்போது வெற்றிப்படங்களில் நடித்து வரும் பிரியங்கா அருள் மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இவர் ஏற்கனவே டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளார். அதோடு, 2019ம் ஆண்டு வெளியான ஜானி நடித்த கேங் லீடர் படத்திலும் நடித்துள்ளார்.