web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

முதல் நாளில் அதிக வசூல்.. சாதனை படைத்த புஷ்பா திரைப்படம்….

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியானது.

இப்படத்திற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழு நல்ல புரமோஷன்களை செய்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை என சென்று புரமோஷன் செய்தனர். இதன் காரணமாக இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. இப்படம் வெளியாகி ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.71 கோடியை வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து 2021ம் ஆண்டில் முதல் நாள் அதிக வசூல் பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை புஷ்பா படம் பெற்றுள்ளது. புஷ்பா படத்திற்கு முன் அதிக வசூல் பெற்ற படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வக்கீல் சாப் – 52.4 கோடி

அண்ணாத்த – 50.85 கோடி

மாஸ்டர் – 50.02 கோடி

சூர்யவன்ஷி – 39.60 கோடி

அகண்டா- 29.5 கோடி

%d bloggers like this: