அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்படம் நேற்று தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியானது.

இப்படத்திற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழு நல்ல புரமோஷன்களை செய்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை என சென்று புரமோஷன் செய்தனர். இதன் காரணமாக இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இப்படம் வெளியாகி ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.71 கோடியை வசூல் செய்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சிலரோ ரூ.47.50 கோடி வசூலை செய்துள்ளதாக பதிவிட்டுள்ளனர். தயாரிப்பு தரப்பு உறுதி செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும்.