தெலுங்கில் பல ஹிட் படங்களை இயக்கியவர் சுகுமார். இவரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா.

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் செம்மரத்தை கடத்தும் கும்பலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 2 பாகங்களாக இப்படம் உருவாகி வரும் நிலையில், முதல் பாகம் வருகிற 17ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், டிரெய்லர் வீடியோ நேற்று இரவு வெளியானது. அனைத்து மொழிகளிலும் இந்த டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மட்டும் இந்த டிரெய்லரை சுமார் 15 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.