தெலுங்கு நடிகர் ராணா டகுபதி சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக அவர் கலக்கியிருந்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் வருகிற 10ம் தேதி இந்தியா முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஹதராபாத்தில் நடைபெற்றது. இதில்,சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினராக தெலுங்கு நடிகர் ராணா கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகர் ராணா ‘10 வருடங்களுக்கு முன்பு நான் நடித்த ஒரு படத்தை எடிட்டிங் அறையில் சூர்யா பார்த்தார். எ
ந்த கருத்தும் தெரிவிக்காமால் என்னை காரில் அழைத்து சென்று ஹைதரபாத்தின் தெருக்களில் சுற்றினார். நீ இப்படத்தில் நடிக்கவே இல்லை. சும்மா சமாளித்திருக்கிறாய் என ஓப்பனாக பேசினார். அதன்பின் அவர் எனக்கு சில அறிவுரைகளை கூறினார்.
அவர் கொடுத்த அறிவுரைதான் நான் பாகுபலியில் பல்லால் தேவா மற்றும் பீம்லா நாயக்கில் டேனியல் சேகர் ஆகிய வேடங்கள் நான் சிறப்பான நடிப்பை வழங்க காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.