பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிரபாஸ். ராஜமவுலியின் கதை, திரைக்கதையில் அவரின் கதாபாத்திரம் செம மாஸாக இருந்து. 2 பாகங்களாக வெளிவந்த பாகுபலி படத்தால் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார் பிரபாஸ்.
ஆனால், அப்படத்திற்கு பின் அவரால் ஹிட் படங்களை கொடுக்க முடியவில்லை. பாகுபலிக்குபின் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் சாஹோ. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அப்படத்திற்கு பின் ராதே ஷ்யாம் என்கிற காதல் கதையில் அவர் நடித்தார்.
இப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள மொழிகளில் வெளியானது. ஆனால், இப்படத்திற்கு எழுந்த எதிர்மறை விமர்சனங்கள் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்துவரவில்லை. இப்படம் ரூ.315 கோடி செலவில் உருவாக்கப்பட்டது.
தமிழகத்தில் இப்படம் மிகவும் சொற்பமான வசூலையே பெற்றுள்ளது. தமிழக வெளியிட்டு உரிமை பெற்றவருக்கு ரூ.1.15 கோடி மட்டுமே வரவாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் எல்லாம் சேர்த்து மொத்தமாக இப்படம் இதுவரை ரூ.175 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளது. பட்ஜெட்டை தாண்டி வசூலித்தால் மட்டுமே அது லாபமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.