தமிழ் சினிமால் காஞ்சனா திரைப்படம் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் வெற்றி பெற்றவர். இவர் இயக்கத்தில் காஞ்சனா பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிக்க லஷ்மி என்கிற பெயரில் வெளியானது.
அடுத்து கே.பி.செல்வன் இயக்கத்தில் ருத்ரன் என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த வருடம் அக்டோபர் மாதமே வெளியானது.
இந்நிலையில், இன்று பூஜையுடன் இப்படம் துவங்கியது. இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.