இந்திய அளவில் சில இயக்குனர்களே பிரம்மாண்ட செலவில் படங்களை எடுக்கின்றனர். அதிலும், பேன் இந்தியா திரைப்படம் எனக்கூறி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு லாபம் பார்ப்பது என்பது சில இயக்குனர்களால் மட்டுமே முடிகிறது.
இதை துவங்கி வைத்தவர் ராஜமவுலிதான். அவரின் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது. அதேபோல், அவரின் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படமும் பல நூறு கோடிகலை வசூலித்தது.
ஒருபக்கம் கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் கேஜிஎப் படம் மூலம் பேன் இண்டியா இயக்குனராக உருவெடுத்துள்ளார். அவர் இயக்கிய கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரு படங்களும் வசூலை வாரி குவித்துள்ளது. கடந்த 14ம் தேதி வெளியான இப்படம் 6 நாளில் உலகமெங்கும் ரூ.600 கோடியை வசூல் செய்துள்ளது.
எனவே, ராஜமவுலிக்கு பிரசர் கூடியுள்ளது. கேஜிஎப்- 2 சாதனையை முறியடிக்கும் வகையில் தனது புதிய படத்தை பிரம்மாண்ட வகையில் எடுக்கவுள்ளாராம். இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிக்கவுள்ளார். ரூ.500 கோடி செலவில் உருவாகும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் தென் ஆப்பிரிக்காவில் நடக்கவுள்ளது.