rajamouli

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களுக்கு பின் இந்தியாவின் சிறந்த இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இப்படம் ரூ.700 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

rrr

அடுத்து ராஜமவுலி தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை ரூ.800 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படத்தில் பெரும்பலான படப்பிடிப்பு ஆப்பிரிக்க காடுகள் எடுக்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் படங்களை விட பிரம்மாண்ட பேன் இண்டியா படமாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படங்கல் ரூ.400 கோடி செலவில் உருவான திரைப்படங்கள் எனக்கூறப்படுகிறது.