தெலுங்கில் சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் நான் ஈ, பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் ராஜமவுலி.
பாகுபலி திரைப்படம் இவரை இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாற்றியுள்ளது. தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘ரஜினியை ஹீரோவாகவும், கமல் வில்லனாகவும் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது.
அல்லது ரஜினி வில்லன், கமல் ஹீரோவாகவும் இருக்கலாம். அதைப்பற்றி நினைத்தாலே எக்சைட்டாக இருக்கிறது. அந்த மாதிரி கதை எதுவும் என்னிடம் இல்லை. ஆனால், ஐடியா இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
இது ரஜினி மற்றும் கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.