பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி.
இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகி வருகிறது. மேலும், இவர் இயக்கும் படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு பின் மகேஷ்பாபு நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை ராஜமவுலி இயக்கவுள்ளார்.
இந்நிலையில், பாகுபலி படத்தில் இடம் பெற்ற கட்டப்பா போல் இந்த படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறதாம். இதற்கு கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என ராஜமவுலி கருதுகிறாராம். எனவே, இது தொடர்பாக கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தில் கமல் நடிக்க சம்மதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…