கும்கி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் பிரபுவின் மகன். நடிகர் திலகம் சிவாஜியின் பேரன். தொடக்கத்தில் சில வெற்றிபடங்களை கொடுத்தாலும் அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் பெரிதாக வெற்றியை பெறவில்லை. ஆனால், சமீபத்தில் ஓடிடியில் வெளியான டானாக்காரன் திரைப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
இப்படத்தை இயக்குனர் தமிழ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஜெய்பீம் திரைப்படத்தில் டெரர் இன்ஸ்பெக்டராக வந்து திட்டு வாங்கியவர் ஆவார். இவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை இப்படத்தில் நிரூபித்துள்ளார். போலீஸ் அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் விக்ரம் பிரபுவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்துள்ள விக்ரம் பிரபு ‘என் கனவில் கூட நினைத்து பார்க்காததை அடைந்து விட்டதாக நினைக்கிறேன். சூப்பர்ஸ்டார் என்னை பாராட்டியது ஒரு சிறந்த உணர்வு. உங்கள் பிடித்தை ஒன்றை பின் தொடர்ந்தால் உங்கள் வாழ்வில் சிறந்த சம்பவங்கள் நடக்கும்’ என பதிவிட்டுள்ளார்.