சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. விஜய் ரசிகர்கள் பல நாட்களுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து வைத்துள்ளனர்.
ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது.
ரஜினியின் அடுத்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பீஸ்ட் படத்தை பார்க்க விரும்பிய ரஜினி சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இப்படத்தை பார்த்துள்ளார். ஆனால், அவருக்கும் படம் பெரிதாக ஈர்க்கவில்லை என்பது அவரின் ரியாக்ஷனில் தெரிந்ததாக செய்திகள் கசிந்துள்ளது.
எனவே, தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை ரஜினி நெல்சனுக்கு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.