web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

அதிரடி திருப்பம்..!..நெல்சனா? அட்லீயா?…என்ன முடிவெடுக்க போகிறார் ரஜினி?….

nelson

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது.

நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது.

beast

ரஜினியின் அடுத்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பீஸ்ட் படத்தை பார்க்க விரும்பிய ரஜினி சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இப்படத்தை பார்த்துள்ளார். ஆனால், அவருக்கும் படம் பெரிதாக ஈர்க்கவில்லை என்பது அவரின் ரியாக்‌ஷனில் தெரிந்ததாக செய்திகள் கசிந்துள்ளது.

rajini

இந்நிலையில், உங்களுக்கு விருப்பம் எனில் நெல்சனை வைத்து படம் எடுப்போம். இல்லையெனில் அட்லீ அல்லது தேசிங்கு பெரியசாமி இவர்களில் யாரேனும் ஒருவரை வைத்து படம் எடுப்போம். இது உங்கள் விருப்பம் என ரஜினியின் முடிவுக்கு சன் பிக்சர்ஸ் விட்டுவிட்டதாம். எனவே, யார் இயக்குனர் என்பதை விரைவில் ரஜினியே முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: