தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. சமீபகாலமாக அவரின் திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுப்பதில்லை. பாபா படத்தில் இது துவங்கியது. மேலும், அவர் நடிப்பில் வெளியான லிங்கா, குசேலன், தர்பார் ஆகிய படங்கள் வெற்றியை பெறவில்லை.

எனவே, சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். ஆனால், அப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதில் அவர் அப்செட்டில் இருக்கும் ரஜினி அடுத்து எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அடுத்து அவரின் படங்களை இயக்கும் இயக்குனர்களின்பட்டியலில் கார்த்திக் சுப்பாராஜ், கே.எஸ்.ரவிக்குமார் என பலரின் பெயர்கள் அடிபட்டது.

balki

ஆனால், பாலிவுட் பட இயக்குனர் பால்கி இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. பால்கி அமிதாப்பச்சனை வைத்து சீனி கம், ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். விரைவில் இருவரும் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.