ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
கார்த்தி சுப்பாராஜ் தற்போது விக்ரம் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் முடிவடையும் எனவும், அடுத்த வருடம் அதாவது 2022 பிப்ரவதி மாதம் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனக்கூறப்படுகிறது. மேலும், 2022 வருட தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் எனத்தெரிகிறது.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஏற்கனவே ரஜினி ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.