பீஸ்ட் படத்திற்கு பின் நேரடி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகும் ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே வெளியான செய்திதான்.
இது விஜயின் 66வது திரைப்படமாகும். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்திற்கான வசனத்தை எழுதவிருந்த இயக்குனர் ராஜூ முருகன் திடீரென இப்படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்கு தமிழில் வசனம் எழுதவுள்ளார். ராஜூ முருகன் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதால் இப்படத்திலிருந்து அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.