web analytics
Friday, September 23SOCIAL MEDIA

கொஞ்ச நேரம் சீனுக்கு ஒரு கோடி சம்பளம்!…. அதிர்ச்சி கொடுத்த ராஷ்மிகா…

rashmika

கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ஆந்திர சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் ராஷ்மிகா. ஏனெனில் அப்படம் டப் செய்யப்பட்டு தொலைக்காட்சியில் வெளியானது.

மேலும், சுல்தான் படத்திலும் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதோடு, சமீபத்தில் வெளியான பேன் இண்டியா திரைப்படமான புஷ்பா மூலம் இந்திய சினிமா உலகில் அவர் பிரபலமடைந்துள்ளார். எனவே, 2 கோடி சம்பளத்தை ரூ.4 கோடியாக ஏற்றிவிட்டாராம்.

இந்நிலையில், தெலுங்கில் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் புதிய படத்தில் அரைமணி நேரம் மட்டுமே வரும் பத்திரிக்கையாளர் வேடத்தில் அவரை நடிக்க படக்குழு அணுகிய போது ஒரு கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தாராம். ஆனாலும், புஷ்பா படம் மூலம் அவர் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமடைந்துள்ளதால் அவர் கேட்ட சம்பளத்திற்கு ஒப்புக் கொண்டதாம் தயாரிப்பாளர் தரப்பு..

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது சினிமாவில் முக்கியம் என்பதை ராஷ்மிகா நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் போல…

%d bloggers like this: