விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் வரி வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இப்பாடலுக்கு விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடியிருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

இந்த பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. எனவே, திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி சின்னத்திரை நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா இப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார். பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து அவர் அந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)