vijay

பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.

இப்படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். பல வருடங்களுக்கு பின் ஒரு மென்மையான காதல் கதையில் விஜய் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. எனவே, தமிழ், தெலுங்கு என 2 மொழிக்கும் ஏற்றவாறு கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.ராஷ்மிகா மந்தனா மற்றும் சில பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது.

தற்போது 2 நடிகைகள் ரேஸில் உள்ளனர். அது பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் ஆவர். பூஜா ஹெக்டே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜயுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். எனவே, விஜய் அவரை பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், புஷ்பா படம் மூலம் பேன் இண்டியா நடிகை ஆகிவிட்டார் ராஷ்மிகா. எனவே, யாரை நடிக்க வைக்கலாம் என இயக்குனர் யோசித்து வருகிறாராரம். விரைவில் இது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.