vijay

விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கவுள்ளார். தெலுங்கில் பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரிக்கும் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

இப்படம் மூலம் தெலுங்கில் களம் இறங்கவுள்ளார் நடிகர் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதமே சென்னையில் துவங்கவுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. பூஜா ஹேக்டே, ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரின் பெயர்களும் அடிபட்டது. பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் விஜயுடன் ஏற்கனவே நடித்துவிட்டார்.

இந்நிலையில், இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பது உறுதியாகியுள்ளது. முதன் முதலாக இப்படம் மூலம் விஜயுடன் நடிக்கவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. வாய்ப்பு பறிபோனதால் புலம்பி வருகிறாராம் பீஸ்ட் பட நடிகை…