vikram

பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார். இப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இதில், முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா அர்ஜூன் என பலரும் நடித்துள்ளனர்.

ps1

இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் பிரம்மாண்டமான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த டீசர் வீடியோவை வெளியிடும் விழாவை மணிரத்னம் பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆனால், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள விக்ரம் இப்படத்தில் கலந்து கொள்ளவில்லை.

karthi

அவருக்கு உடல்நிலை சரியில்லை என எல்லொரும் நினைத்தனர். ஆனால், அடுத்தநாள் அவர் நடித்த கோப்ரா பட விழாவில் விக்ரம் கலந்து கொண்டார். பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமுக்கு அதிகமான காட்சிகள் இல்லை என்பதால் அதிருப்தி அடைந்தே விக்ரம் பொன்னியின் செல்வன் பட டீசர் விழாவில் கலந்து கொள்ளவில்லை என விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.