robo sanka

இரவின் நிழல் பட விழாவில் அப்படத்தின் இயக்குனர் பார்த்திபன் கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்த விவகாரம் சர்சைக்கு உள்ளானது. இதுபற்றி ஏற்கனவே பார்த்திபன் விளக்கமளித்து விட்டார். கையில் வலி இருந்த நேரத்தில்,மைக்கும் வேலை செய்யவில்லை. எனவே, கோபத்தில் அப்படி செய்துவிட்டேன் என வருத்தம் தெரிவித்தார்.

மைக்கை அவர் நடிகர் ரோபோ சங்கரின் மீது எறிந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுபற்றி விளக்கமளித்துள்ள ரோபோ சங்கர் ‘அந்த நிகழ்ச்சியை பார்த்திபன் ஒருவரே நடத்தினார். மைக் வேலை செய்யாததால் கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டார். என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பலமுறை மன்னிப்பு கேட்டார். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என அவரிடம் கூறினேன்.

parthiban

அவர் யாரையும் புண்படுத்த மாட்டார். மிகவும் அன்பானவர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன். 25 படங்களில் நடித்த அனுபவம் இந்த படத்தில் எனக்கு கிடைத்தது. ஒன் மேன் ஆர்மியாக வேலை பார்த்துள்ளார் பார்த்திபன். உலகத்தில் உள்ள எல்லா விருதும் இப்படத்திற்கு கிடைக்கும். இப்படத்தில் நானும் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. உலகமே திரும்பி பார்க்கும் படமாக இப்படம் இருக்கும்’ என அவர் தெரிவித்தார்.