பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் இந்த மாதம் 25ம் தேதி உலகமெங்கும் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் வியாபாரம் ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. இப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. அனைத்து மொழிகளிலும் சேர்த்து இப்படத்தின் தியேட்டர் உரிமை மட்டும் ரூ.800 கோடியை தொட்டுள்ளது.
மேலும், சேட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமை எல்லாம் சேர்த்து இப்படம் ரூ.1125 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. தயாரிப்பாளருக்கு ரூ.400 கோடிக்கு மேல் லாபம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது பாகுபலி 2 படத்தின் வசூலை விட மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.