பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது.

இப்படத்தின் மேக்கிங் சிறப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

rrr

இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் விஜயின் மாஸ்டர் வசூலை தாண்டியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இல்லை. இது நடந்துள்ளது ஆஸ்திரேலியாவில்.

மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் முதல் நாள் 253 டாலர் வசூலித்திருந்தது. ஆனால், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆஸ்திரேலியாவில் 441 டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் விஜயின் ரெக்கார்ட்டை ஆர்.ஆர்.ஆர் முறியடித்துள்ளது.