தமிழகத்தில் கொரோன பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒருபக்கம் ஓமைக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. எனவே, இதை தடுப்பதற்காக தமிழக அரசு இன்று பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதில், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்பதும் இடம் பெற்றுள்ளது.
இது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே, பல மாதங்களுக்கு பின் தற்போதுதான் கடந்த 3 மாதங்களாகத்தான் திரையரங்குகள் 100 சதவீத இருக்கை என்கிற அனுமதியோடு செயல்பட்டு வருகிறது.
டாக்டர், மாநாடு போன்ற படங்கள் நல்ல வசூலை கொடுத்து திரையுலகினருக்கு நம்பிக்கையை கொடுத்தது. பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 7ம் தேதி ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாகவுள்ளது.
10ம் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் இது ஆர்.ஆர்.ஆர். படத்தின் வசூலை பாதிக்க வாய்ப்புண்டு. எனவே, திட்டமிட்டபடி இப்படம் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகுமா இல்லை ஜனவரி 10ம் தேதிக்கு பின் வெளியாகுமா என்பது தெரியவில்லை. ஜனவரி 13ம் தேதி வலிமை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.