பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்ற்ய் உலகமெங்கும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மேக்கிங் சிறப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த படம் வசூலிலும் சாதனை படைத்துள்ளது. நேற்று ஒரேநாளில் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.248 கோடியை இப்படம் வசூலித்துள்ளது. இதுவரைக்கும் எந்த தென்னிந்திய திரைப்படமும் முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடியை இப்படம் முதல் நாளிலேயே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் இப்படத்தின் முதல் நாள் வசூல் விஜயின் மாஸ்டர் வசூலை தாண்டியது. மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் முதல் நாள் 253 டாலர் வசூலித்திருந்தது. ஆனால், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆஸ்திரேலியாவில் 441 டாலர் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.