பாகுபலி படம் மூலம் இந்திய சினிமாவை தன் பக்கம் திருப்பியவர் ராஜமவுலி. இப்படத்திற்கு பின் அவர் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த திரைப்படம் வருகிற 25ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளதால் இப்படம் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், இப்படம் அமெரிக்காவில் ப்ரீமியர் முன்பதிவில் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு அமெரிக்காவில் ஏற்கனவே துவங்கிவிட்டது.
முதல் முறையாக ஒரு இந்திய திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சியின் வசூல் 8 லட்சம் அமெரிக்கா டாலரை தொட்டுள்ளது. அதில் 5 லட்சம் டாலர் சினிமார்க் தியேட்டர்கள் மூலம் கிடைத்துள்ளது. இந்த தகவலை இப்படத்தை அமெரிக்காவில் வெளியிடும் வினியோக நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படம் வெளியாகும் வரை முன்பதிவு தொடரும் என்பதால் இந்த தொகை இன்னும் அதிகரிக்கும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து பார்க்கும்போது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாகுபலி வசூலை தாண்டும் என கணிக்கப்படுகிறது.