Thursday, March 4SOCIAL MEDIA
Shadow

ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… அதிரும் இணையதளம்…

rajamouli

தெலுங்கில் சில படங்களை இயக்கிய ராஜம்வுலி பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அவரின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் விரும்பினர். தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து புதிய படத்தை அவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் அலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் சில ஹாலிவுட் நடிகர்களும் நடித்து வருகின்றனர். பிரம்மாண்ட செலவில் உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இத்திரைப்படம் இந்த வரும் அக்டோபர் 13ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், ராம் சரண் குதிரை ஓட்டுவது போலவும், ஜூனியர் என்.டி.ஆர் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போலவும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதையடுத்து #RRRFestivalOnOct13th என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.