பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த மாடஹ்ம் 24ம் தேதி உலகமெங்கும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியானது. இப்படத்தின் மேக்கிங் சிறப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டனர்.
இந்த படம் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. படம் ரிலீஸான முதல் நாளில் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.248 கோடியை இப்படம் வசூலித்தது. இதுவரைக்கும் எந்த தென்னிந்திய திரைப்படமும் முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்ததில்லை. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடியை இப்படம் முதல் நாளிலேயே வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி முதல் வாரத்தில் ரூ.709.36 கோடியும், அதன் 2 வது வாரத்தில் 5 நாட்களில் ரூ.230 கோடி என இதுவரை மொத்தம் ரூ.939.41 கோடியை இப்படம் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே, விரைவில் இப்படம் ரூ.1000 கோடி வசூலை தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் ரூ.700 கோடியையும், பாகுபலி 2 1500 கோடியையும் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்த சாதனைகளை முறியடிக்கும் எனக்கூறப்படுகிறது.