யுடியூப்பில் மாரி படத்தில் தனுஷும், சாய் பல்லவியும் ஆடிய ரவுடி பேபி பாடல் சாதனையை இதுவரை எந்த பாடலும் முறியடிக்கவில்லை.
இந்நிலையில், சாய் பல்லவி தனுஷை முந்தியுள்ளார். எப்படி என கேட்குறீகளா?. தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தில் இடம் பெற்ற கண்டா வர சொல்லுங்க பாடலும், தெலுங்கில் சாய் பல்லவி நடித்த லவ் ஸ்டோரி படத்தின் ‘சாரங்க தரியா’ பாடலும் சமீபத்தில் யுடியூப்பில் வெளியானது.
இதில், தனுஷ் பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களையும், சாரங்க தரியா பாடல் 62 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது. இது இரண்டுமே நாட்டுப்புற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.