web analytics
Friday, September 23SOCIAL MEDIA

ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா?….

samantha

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. இதில், முதல் பாகம் சமீபத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை தெலுங்கில் ஹிட் படங்களை இயக்கிய சுகுமார் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா என்கிற அந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. யுடியூப்பில் இந்த பாடல் இதுவரை 20 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இந்த பாடலில் மிகவும் கவர்ச்சியான உடையில் சமந்தா ஆடிய நடனம் ரசிகர்களை சுண்டி இழுத்தது.

இந்நிலையில், இந்த பாடலுக்கு நடனமாட சமந்தா ரூ.5 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ரூ.1.5 கோடி சம்பளம் பெற்றதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: