தமிழ் சினிமாவில் காமெடியானாக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம். ஆனால், அவர் நடித்த படங்களில் தில்லுக்கு துட்டு படத்தை தவிர மற்ற படங்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஆனாலும், அவர் ஹீரோவாக நடிப்பதை கைவிடவில்லை.
இந்நிலையில், தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை கன்னடத்தில் குடும்ப செண்டிமெண்ட் மற்றும் காமெடி படங்களை இயக்கி வரும் பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கவுள்ளார்.
சமீபகாலமாக பிரபாஸ், அல்லு அர்ஜூன், ஜுனியர் எண்டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படங்கள் பேன் இண்டியா படம் எனக்கூறி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது அந்த ஆசை சந்தானத்திற்கும் வந்துள்ளது போல.
ஆனால், தமிழேலேயே வெற்றிபடம் கொடுக்க முடியாத சந்தானம் கன்னடத்தில் ஹிட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.