sarathkumar

பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.

இப்படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். பல வருடங்களுக்கு பின் ஒரு மென்மையான காதல் கதையில் விஜய் நடிக்கவுள்ளாராம்.இப்படத்தில் விஜயின் அண்ணணாக சரத்குமார் நடிக்கவுள்ளாராம். இது விஜய் நடிக்கும் 66வது திரைப்படமாகும்.

vijay

இந்நிலையில், இப்படம் பற்றி கருத்து தெரிவித்த சரத்குமார் ‘நான் நடித்த சூர்யவம்சம் 250 நாள் விழா சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. அந்த விழாவில் விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என பேசினேன். தற்போது அது நடந்துள்ளது. தளபதி 66 திரைப்படம் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படமாகும். இப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும்’ என அவர் தெரிவித்தார்.