web analytics
Saturday, August 6SOCIAL MEDIA

அந்த இயக்குனர் படத்தில் ஹீரோவாக செல்வராகவன் – புது பட அப்டேட்

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே என பல படங்களை இயக்கியவர் செல்வராகவன்.

சமீப காலமாக அவர் நடிக்க துவங்கியுள்ளார். முதன் முதலாக சாணி காயிதம் என்கிற படத்தில் கீர்த்தி சுரேஷும் இவரும் நடித்து முடித்துள்ளனர். அதன்பின் பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய வில்லனாக அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய மோகன் இயக்கும் அடுத்த படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.

%d bloggers like this: