danush

தனுஷை உருவாக்கியவர் யார் என்றால் அது அவரின் அண்ணன் செல்வராகவன் என்பது எல்லோருக்கும் தெரியும். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் மூலம் தனுஷை ஒரு சிறந்த நடிகராக மாற்றினார். புதுப்பேட்டை படத்திற்கு பின் தனுஷும் செல்வராகவனும் இணையவே இல்லை.

பல வருடங்கள் கழித்து தற்போது நானே வருவேன் படம் மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

selva

இந்நிலையில், செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கடந்த பல வருடங்களாகவே நாங்கள் இருவரும் ஒன்றாக அதிக நேரம் செலவழிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நாங்கள் இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருந்தோம். ஆனால், தற்போது நானே வருவேன் படம் மூலம் அது நடந்துள்ளது. தனுஷ் தங்கத்தால் ஆன இதயம் கொண்ட ஒரு சிங்கம்’ என பதிவிட்டுள்ளார்.