உடல் எடையையை தாறுமாறாக ஏற்றி கிண்டலுக்கு உள்ளான சிம்பு, உடலை குறைத்தே தீருவேன் என கங்கணம் கட்டு தனது உடல் எடையை பாதியாக குறைத்தார். அதன்பின் ஈஸ்வரன் படத்தில் நடித்து கொடுத்துவிட்டு, தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
சிம்புவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தயாரிப்பாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிம்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு ஐய்யப்பன் கோவிலில் இருமுடி கட்டி அவர் தரிசனம் செய்யும் புகைப்படம் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், காசியில் கங்கை நதியில் அவர் விளக்கு விடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.