web analytics
Friday, May 20SOCIAL MEDIA

அந்த இயக்குனருடன் மீண்டும் ஒரு படம் – சிம்பு மாஸ் அறிவிப்பு

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது.

simbu

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், சிம்பு, சுசீந்திரன், பாரதிராஜா மற்றும் சிம்பு ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சிம்பு ‘மாநாடு, பத்து தல படத்திற்கு பின் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன். அந்த படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும். இது தவிர மேலும் 3 படங்களிலும் நடிக்க உள்ளேன்’ எனவும் அவர் தெரிவித்தார்.

%d bloggers like this: