web analytics
Wednesday, January 19SOCIAL MEDIA

மாநாடு வெளியாகி 50 நாட்கள்!.. சிம்பு வெளியிட்ட மாஸ் வீடியோ…

simbu

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். டைம் லூப் திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

பல வருடங்களுக்கு பின் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக இருந்தது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பல தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடியது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

maanaadu

இப்படம் கடந்த வருடம் நவம்பர் 25ம் தேதி வெளியானது. எனவே, இப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படம் இன்னமும் சில திரையரங்குகளில் ஓடி வருகிறது. எனவே, படத்தின் வெற்றிக்கு பாடுபட்ட எல்லோருக்கும் படக்குழுவினர் நன்றி கூறி வருகின்றனர். இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எல்லோருக்கும் நன்றி கூறி முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராமில் இப்படத்திற்காக எடுக்கப்பட்ட சண்டை காட்சிகளின் தொகுப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.