பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதியும், 14ம் தேதி சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகவுள்ளது.
வழக்கமாக விஜய், அஜித் படம் வெளியாகும் வேறு பெரிய நடிகர் படம் வெளியானால், சமூக வலைத்தளங்களில் விஜய் & அஜித் ரசிகர்கள் அந்த நடிகர் மற்றும் படத்தை கடுமையாக விமர்சிப்பார்கள். விஸ்வாசம் வெளியான போது ரஜினி நடித்த பேட்டை படமும் வெளியானது. எனவே, அஜித் ரசிகர்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர்.
என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் என் ஈஸ்வரன் பாருங்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைக்கண்டு நெகிழ்ந்து போன விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக ஈஸ்வரன் படத்தை பார்ப்போம் என தெரிவித்து வருகின்றனர்.
#Master #Eeswaran #SpreadLove 🙏🏻 pic.twitter.com/g6SOq1a1uE
— Silambarasan TR (@SilambarasanTR_) January 4, 2021