தமிழ் சினிமாவில் எப்போதும் செய்திகளில் அடிபடும் நடிகராக இருப்பவர் சிம்பு. இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஒருபக்கம், நடிகை நித்தி அகர்வாலுடன் அவருக்கு காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டிய பின்பே திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவுக்கு சிம்பு வந்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பின்பே நான் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் அறிவித்தார். நடிகர் சங்கமும் கட்டிய பாடில்லை. விஷாலும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே எங்கே சிம்புவும் அப்படி ஆகிவிடுவாரோ என அவரின் ரசிகர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கிழக்கு கடற்கரையில் வீடு கட்டுவது நடிகர்களிடையே பிரபலமாகி வருகிறது. நடிகர் விஜய் நீலாங்கரையில் பங்களா ஒன்றை கட்டி குடியேறினா. மேலும்,சில சினிமா பிரபலலங்களுக்கும் அங்கு வீடு உள்ளது. தற்போது சிம்புவும் அந்த முடிவுக்கு வந்துள்ளார்.
சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடையும் நிலையிலுள்ளது. அடுத்து பத்து தல படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.