தமிழ் சினிமாவில் 35 வயதை கடந்த பின்பும் முரட்டு சிங்கிளாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. நயன்தாரா, ஹன்சிகா என 2 நடிகைகளுடன் காதல் ஏற்பட்டு பின்னர் பிரேக்கப் ஆனது. சமீபத்தில் மாநாடு என்கிற ஹிட் படத்தையும் கொடுத்தார் சிம்பு.
ஒருபக்கம் உங்களுக்கு எப்போது திருமணம் என்கிற கேள்வி விடாமல் அவரை துரத்தி வருகிறது. அவரும் எதையாவது சொல்லி சமாளித்து வருகிறார். அநேரம், ஈஸ்வரன் படத்தில் அவருடன் நடித்த நித்தி அகர்வாலுடன் அவருக்கு காதல் ஏற்பட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும், இருவரும் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சிம்புவின் காதலுக்கு அவரின் பெற்றோர் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும், விரைவில் சிம்பு திருமண செய்தி வெளியாகலாம் எனவும் செய்திகள் கசிந்துள்ளது.