அண்ணாத்த படம் கலவையான விமர்சங்களை பெற்றுள்ளதால் அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற மன நிலையில் இருக்கிறார் ரஜினிகாந்த்.
அதனால்தான் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
நெல்சன் என்றாலே அவரின் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுவார். ஆனால், ரஜினி படத்தில் அவரின் மகனாக நடிக்கும் ஒரு கேமியோ வேடத்தையும் நெல்சன் கொடுத்துள்ளாராம். மேலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்த பிரியங்கா மோகனும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது.
ரஜினியின் தீவிர ரசிகர் சிவகார்த்திகேயன். எனவே, இந்த வாய்ப்பு அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதால் அவர் உற்சாகமாக இருக்கிறாராம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.