பீஸ்ட் படத்திற்கு பின் நெல்சன் ரஜினியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது ரஜினியின் 169வது திரைப்படமாகும்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்கள் என செய்திகள் வெளியானது. ஆனால், நெல்சனோ, சிவகார்த்திகேயனோ இதுபற்றி எங்கும் பேசவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த சிவகார்த்திகேயன் ‘என் ஊருக்கு சென்றிருந்த போது என் பெரியம்மா இதுபற்றி கேட்டார்கள். அவர்களுக்கு கூட ரீச் ஆகியுள்ளது. ஆனால், எனக்குதான் எதுவும் தெரியவில்லை. அந்த படத்தில் நடிப்பது பற்றி நெல்சன் என்னிடம் எதுவும் பேசவில்லை. நானும் அவரிடம் கேட்கவில்லை. ஆனால், செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.