Wednesday, April 14SOCIAL MEDIA
Shadow

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – விரைவில் அறிவிப்பு?..

siva karthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில், டாக்டர் படம் மே மாதம் வெளியாகவுள்ளது. அதேபோல், சிபி சக்ரவர்த்தி என்பவரின் இயக்கத்தில் டான் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த படங்களுக்கு பின் கவன், கோ, காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிகில் உள்ளிட்ட சில படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.