சிவகார்த்திகேயன் என்றால் கதாநாயகியை காதலிப்பார், காமெடி செய்வார், கவுண்டர் கொடுப்பார் என்றுதான் அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை அவர் ஒரு பக்கா ஆக்ஷன் படத்தில் நடித்தது இல்லை.
சினிமாவை பொறுத்தவரை எந்த மொழியாக இருந்தாலும் சரி…ஆக்ஷன் படங்களில் நடித்தால்தான் சூப்பர்ஸ்டார் ஆக முடியும். எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் வரை பலரும் அந்த ஃபார்முலாவைத்தான் ஃபாலோ செய்கிறார்கள்.
தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் அடுத்து வெளியாகவுள்ள நிலையில், தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.
இதுவரை குழந்தைகளுக்கு பிடித்தமான படங்கள் மற்றும் பொழுதுபோக்கு படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்படத்தில் பக்கா ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். துவக்கம் முதலே அவர் ஆக்ஷனில் தூள்கிளப்பும் படியான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.