web analytics
Thursday, December 8SOCIAL MEDIA

எனக்கு 6 கோடிதான் வேணும்!.. தயாரிப்பாளரிடம் அடம் பிடித்த எஸ்.ஜே.சூர்யா…

sj suriya

வாலி, குஷி திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.ஜே. சூர்யா. அதன்பின் அவர் ஆஆ, நியூ, இசை என சில படங்களை இயக்கி அவரே கதாநாயகனாக நடித்தார். தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த வில்லனாக அவர் உருவெடுத்துள்ளார்.

மாநாடு திரைப்படம் அவரின் திரையுலக மதிப்பை மாற்றியுள்ளது. இப்படத்தில் சிம்புவுடன் போட்டி போட்டு அவர் நடித்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. இப்படத்தின் வெற்றிக்கே அவர் முக்கிய காரணம் என விமர்சகர்கள் கூறும் அளவுக்கு அவரின் நடிப்பு தாறுமாறாக இருந்தது.

இந்நிலையில், விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க எஸ்.ஜே. சூர்யாவுக்கு வாய்ப்பு வந்தது. மாநாடு வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக ஏற்றிவிட்டார் எஸ்.ஜே. சூர்யா.

ஆனால், இப்படத்திற்கு 4 கோடி மட்டுமே கொடுக்க அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் முன் வந்தது. ஆனால், எஸ்.ஜே. சூர்யா ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அவருக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என தயாரிப்பாளர் தரப்பு யோசித்தது. ஆனால், படத்தின் கதை பிடித்திருந்ததால் சம்பளத்தை குறைத்து ரூ.5 கோடியாக பேசி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் தொடர்பாக எஸ்.ஜே சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கடவுளே! எல்லா நல்ல கதையையும் என்கிட்டவே அனுப்புறீயே. இந்தக் கதையை மாநாடு-2 என்றே சொல்லலாம் அந்த அளவுக்குத் திரைக்கதை உள்ளது’ என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: