sj surya

அஜித்துக்கு வாலி மற்றும் விஜய்க்கு குஷி என அவர்கள் துவண்டு போயிருந்த காலத்தில் ஹிட் கொடுத்து அவர்களை தூக்கிவிட்டவர் எஸ்.ஜே.சூர்யா. அதன் நியூ, அ ஆ, இசை ஆகிய படங்களை இயக்கி நடித்தார். ஆனால், ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.

எனவே, நடிகராக மாறினார். விஜய் நடித்த மெர்சல் படத்தில் அசத்தல் வில்லனாக நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தார். தற்போது சிம்பு நடித்த மாநாடு படத்தில் அசத்தல் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். மாநாடு படத்தின் வெற்றிக்கே அவர்தான் காரணம் என பலரும் கூறும் அளவுக்கு அவரின் நடிப்பு அசத்தலாக இருந்தது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்திலும் அவர் நடித்துள்ளார். வேறு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில், தனது சம்பளத்தை தடாலடியாக ஏற்றிவிட்டார். 2 கோடி சம்பளம் பெற்று வந்த அவர் ரூ.7 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். இதனால், தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.